பழனி கோயில் நில விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பதிலளித்துள்ளார். அப்போது பேசிய அவர், "என் குடும்பத்தில் உள்ள யாரிடமும் 2 கோடி ரூபாய் அளவுக்கு பணமே கிடையாது. நாங்கள் வசிப்பதே வாடகை வீட்டில்தான்; அப்படியே நாங்கள் சொத்து வாங்க நினைத்தாலும், சென்னையில் வாங்காமல் பழனியில் போய் ஏன் வாங்கப் போகிறோம்?" எனக் கூறி குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.