திமுகவின் அழைப்புக்காக காத்திருப்பதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் நேற்று (பிப்., 16) செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'கூட்டணி, அதிகாரப் பகிர்வு குறித்து 5 பேர் கொண்ட குழு பேச்சுவார்த்தை நடத்தி, கட்சி மேலிடத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கும். அதன் பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும். திமுக இதுவரை கூட்டணியில் பங்கு இல்லை என சொல்லவில்லை. அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை தொடங்கும் போது நிலைப்பாடு தெரியவரும்' என்று கூறினார்.