“ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார். மதுரையில் இன்று (ஜன.11) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும், எதை பற்றி வேண்டுமானாலும் பேசலாம். அதனால், கூட்டணியிலும் பங்கு, ஆட்சியிலும் பங்கு என பேசுகிறார்கள். ஆனால், அந்த கருத்தில் எங்களுக்கு உடன்பாடில்லை. நாங்கள் அந்த மாதிரியான நிபந்தனைகளை முன்வைக்கவில்லை, வைக்கப்போவதும் இல்லை” என்றார்.