சென்னை: “எங்களுக்கு மூன்று, நான்கு சீட்டுகள் வேண்டாம், தமிழகத்தை ஆள்வதே இலக்கு” என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அம்பத்துாரில், நாதக சார்பில், 'தமிழ்நாடு நாள்' பொதுக்கூட்டம் நேற்று (நவ.1) நடந்தது. அப்போது பேசிய அவர், “ கூட்டணிக்காக காலில் விழுந்து கிடக்க முடியாது. நாம் பதறாமல், தடுமாறாமல் இலக்கை நோக்கி பயணித்து கொண்டே இருப்போம். திரை கலைஞர்களை பாராட்டுவோம். ஆனால், நாட்டை ஆள தகுதியும் அறிவும் வேண்டும்” என்றார்.