சமூகநீதி அரசாக வென்ற நாங்கள் ஆட்சியில் பங்கு என்ற வாக்குறுதியை நிறைவேற்றினோம் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (மே 22) செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாதியின் அடிப்படையில் தேர்தலை எதிர்கொள்ளவில்லை. உண்மையான சமூகநீதி நாளை உருவாக்கி உள்ளோம். முதலமைச்சர் அனைவருக்குமான வாய்ப்பை வழங்கியுள்ளார். பணபலம் தூக்கி எறியப்பட்டுள்ளது. பெரியார், அம்பேத்கர் வழியில் இந்த அரசு செயல்படும் என கூறினார்.