சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் தான் கூட்டணி என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடையே பேசிய அவர், திமுகவுடன் தான் கூட்டணி என கூறி குழு ஒன்றை அமைத்துள்ளோம். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்காக 36 நாட்களாக காத்திருக்கிறோம். நாங்கள் தோழமை கட்சிகளுக்கு மரியாதையை கொடுப்பவர்கள், காங்கிரஸ் எப்போதும் பொறுமையாக இருக்கும் கட்சி" என கூறினார்.