உலகின் தொன்மையான மொழியான தமிழில் பேச முடியாதமைக்காக வருந்துவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். காரைக்காலில் நடக்கும் பாஜக பிரச்சார கூட்டத்தில் இன்று (பிப்.14) பங்கேற்ற அவர் பேசுகையில், “புதுச்சேரியில் ஊழலை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முடிவுக்கு கொண்டுவந்துள்ளது. டெல்லிக்கு அடிமையாக காங்கிரஸ் அரசு ஆட்சி செய்து வந்தது. புதுச்சேரியில் அரசியல் நிலைத்தன்மை, ஸ்திரத்தன்மையை அமைத்துள்ளோம்” என்றார்.