5 ஆண்டுகளில் 22 லட்சம் பேருக்கு பட்டா வழங்கியுள்ளோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விருதுநகரில் இன்று (பிப்., 07) நடைபெற்று வரும் திமுக இளைஞரணி மாநாட்டில் பேசிய அவர், 'விருதுநகர் என்றவுடன் நினைவுக்கு வருவது காமராஜர்தான். காமராஜர் என்றதும் நினைவுக்கு வருவது மதிய உணவுத்திட்டம், திராவிட மாடல் என்றதும் நினைவுக்கு வருவது காலை உணவுத்திட்டம். 200 தொகுதிகளில் நாம் வெல்வோம்' என தெரிவித்தார்.