“திமுகவின் கொள்கையே கொல்லை தான்” என தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் சந்திப்பில் பேசிய விஜய், ”நமக்கு கொள்கை இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்னு ஒரு அடிப்படை கோட்பாட்டை அறிவித்த நமக்கு கொள்கை இல்லையாம். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். சமூகநீதி கிடைக்க வேண்டும் அதுவும் உண்மையான சமூகநீதியாக இருக்க வேண்டும் என சொன்ன நமக்கு கொள்கை இல்லை எனக் கூறுகின்றனர்” என பதிலடி கொடுத்தார்.