"அவதூறுகளை சந்திப்பது
திமுக-வுக்கு புதிதல்ல” என துணை முதலமைச்சர் உதயநிதி
ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் சந்திக்காத அவதூறுகள் எதுவும் இல்லை. ஏன் முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் மிசாவில் கைதாகவில்லை என எதிரிகள் அவதூறு, பொய் செய்திகளைப் பரப்பினார்கள். ஆனால் அதற்கு ஆதாரத்துடன் பதிலடி கொடுத்துள்ளோம். உண்மையை வெளிக்கொணர நாம் கஷ்டப்பட வேண்டியுள்ளது” என்றார்.