திமுக அரசு உழைப்பாளர் உரிமைக்கு முன்னுரிமை அளிக்க தயங்குகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். மேலும், தொழிலாளர்கள் பிரச்சனையில் திமுக அரசின் அணுகுமுறையில் போதாமை இருக்கிறது என்பது உண்மை. சங்கம் வைப்பதற்குக்கூட போராட வேண்டியிருக்கிறது. தொழிலாளர் பிரச்சனையில் திமுக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்" என கூறியுள்ளார்.