“அதிமுக-வின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் கோச்சுகள் நியமிக்கப்படவில்லை” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். ’தமிழ்நாடு சாம்பியன்’ விழாவில் பேசிய அவர், “திராவிட மாடல் ஆட்சியில்தான் 76 பயிற்றுநர்களை நியமித்துள்ளோம். மேலும், 4 மாற்றுத்திறனாளி பயிற்றுநர்கள் உட்பட 34 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இன்று உலகம் செல்லும் வேகத்திற்கு ஒரு முறை வென்றால் மட்டும் போதாது, தொடர்ந்து வெற்றி பெற வேண்டும்” என்றார்.