நாங்கள் மாமன், மச்சானாக பழகுகிறோம், முதல்வர் வேண்டுமானால் அங்காளி, பங்காளி என சொல்லலாம் என தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மேலும், "திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதல்வரை நினைத்து வருத்தமாக உள்ளது. தீபம் ஏற்றுவதால் இஸ்லாமியர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டும் நிறைவேற்றப்படவில்லை" என கூறியுள்ளார்.