உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைக்கும் வகையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் பரபரப்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இன்று இரவு ஈரான் மீது இன்னும் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என்று அவர் எச்சரித்தார். துருக்கியில் நடைபெற்று வரும் நேட்டோ (NATO) உச்சிமாநாட்டில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். "நான் ஒரு சிறிய எச்சரிக்கையை விடுக்கிறேன். இன்று இரவு நாங்கள் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் போகிறோம்," என்றார். அமைதி ஒப்பந்தத்தை ஈரான் மீறிவிட்டதாக டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.