தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று (மே.22) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “60 நாட்களில் அனைத்தையும் மாற்றி காட்டுவோம். மிகப்பெரிய நிர்வாக மாற்றம் இருக்கும். பல்வேறு துறைகளில் 35% வரை வசூலிக்கப்பட்ட கட்சி நிதி முறையை ஒழித்துள்ளோம். தூர் வாராமல் வாரியதால் பில் போட முடியாது. பினாமி பில் முறையை ஒழிப்போம். தவறுகளை கண்டறிந்து வருகிறோம். விரைவில் மாற்றுவோம்” என்றார்.