“தமிழக மக்களின் நம்பிக்கை எங்களை ஆட்சியாளராக தொடரச் செய்யும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று (பிப்.20) உரையாற்றிய முதலமைச்சர், “5 ஆண்டுகால ஆட்சியில் எதனையும் எதிர்கொள்ளக் கூடிய வல்லமையை பெற்றுள்ளேன். மீண்டும் ஆட்சிக்கு வந்து திட்டங்களை தொடர்வோம். வாக்களித்தவரகள், வாக்களிக்காதவர்க என பிரித்து பார்க்காமல் செயல் ஆற்றி இருக்கிறேன்" என்றார்.