அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் இன்று (பிப்.17) தமிழகம் வருகைதந்திருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "காங்கிரஸ் இன்னும் திமுக கூட்டணியில் தொடருகிறது என தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்கள் ஆட்சியில் பங்கு கேட்பது போன்ற சர்ச்சைகள் அனைத்தும் காங்கிரஸ் தலைமையின் நிலைப்பாடு அல்ல, அது அவர்களின் தனிப்பட்ட கருத்து" என தெரிவித்தார்.