“வெல்லப்போவது தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? என்பதை முடிவு செய்யப்போவதுதான் இந்தத் தேர்தல் தான்” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். செங்கல்பட்டில் நடக்கும் திமுக மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அவர், “சொன்ன வாக்குறுதிகள் மட்டுமல்ல சொல்லாதவற்றையும் செய்துள்ளோம் என மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். மீதமுள்ள கோரிக்கைகளையும் அடுத்த ஆட்சியில் நிறைவேற்றுவோம் எனக் கூறுங்கள்” என வாக்குச்சாவடி முகவர்களுக்கு அறிவுறுத்தினார்.