தவெக ஆட்சி கவிழ காரணமாக இருக்க மாட்டோம்.. திருமாவளவன் பரபர பேட்டி

15பார்த்தது
தவெக ஆட்சி கவிழ காரணமாக இருக்க மாட்டோம்.. திருமாவளவன் பரபர பேட்டி
தவெக ஆட்சி கவிழ நாங்கள் காரணமாக இருக்க மாட்டோம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (மே 26) செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதற்காகவே தவெக அரசுக்கு ஆதரவளித்தோம். அதன் பிறகு அவர்களின் கோரிக்கையை ஏற்று அமைச்சரவையில் இணைந்தோம். அதிமுகவில் இருந்து விலகி TVK-வில் இணைவது ஆரோக்கியமல்ல. விமர்சனங்களுக்கு இடம் கொடுக்கும் வகையில் TVK செயல்பட கூடாது என கூறினார்.