"சின்னஞ்சிறு வயது முதல் நாங்கள் நேசித்த திராவிட இயக்கத்தின் அடையாளமான திமுகவின் எம்.எல்.ஏ.க்களாகவே தொடர்ந்து இருப்போம் என மதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜேந்திரன் மற்றும் செந்தில்செல்வன் தெரிவித்துள்ளனர். மேலும், எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்த மனமில்லாமல் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம் என கூறியுள்ளனர். மேலும், மதிமுகவில் இருந்து எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய நிர்பந்தித்ததாக குற்றம்சாட்டியுள்ளனர்.