கடலூர் பாசார் கிராமத்தில் இந்திய ஜனநாயகக் கட்சியின் 4வது மாநில மாநாடு இன்று (பிப்.8) நடைபெறுகிறது. ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து, கட்சிக் கொடியை ஏற்றிவைத்து மாநாட்டை தொடங்கி வைத்தார். இதில், 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முக்கியமாக, “2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் NDA கூட்டணி ஆட்சி அமைய இந்திய ஜனநாயக கட்சி பாடுபடும்" என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.