பருத்தி மற்றும் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் அடிப்படை கூலி மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றை தலா 10% உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் இன்று (செப்.1) அமைச்சர்
விஜய் பாலாஜி அறிவித்துள்ளார். மேலும், கைத்தறி ஆதரவு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கீழ்க்கதிர்ப்பூரில் உள்ள பேரறிஞர் அண்ணா கைத்தறி பட்டு பூங்காவில் "காஞ்சிபுரம் பட்டு ஏற்றுமதி வர்த்தக வசதி மையம்” அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.