மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் உருவான ‘Ghooskhor Pandat’ என்ற வெப் சீரிஸுக்கு எதிராக உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி அதித்யநாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், முதலமைச்சரின் உத்தரவின் பேரில், அந்த வெப் சீரிஸின் தயாரிப்பாளர்கள், இயக்குநருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 'கூஸ்கோர்' (லஞ்சம் வாங்குபவர்) என்ற சொல்லையும், பிராமண சமூகத்தை குறிக்கும் Pandat என்ற சொல்லையும் இணைத்து சீரிஸுக்கு தலைப்பு வைக்கப்பட்டதால் இந்த எதிர்ப்பு என கூறப்படுகிறது.