தமிழகத்தில், வருகிற சனி, ஞாயிறு வார விடுமுறைகளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். அவர்களுக்கு ஏதுவாக 725 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, மதுரை, குமரி, தூத்துக்குடி, கோவை, சேலம் உள்ளிட்ட பல இடங்களுக்கு நாளை (பிப்.20) முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.