வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக சென்னையிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு முக்கிய இடங்களிலிருந்தும் அரசு
போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. குறிப்பாக கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதாவரத்திலிருந்து திருச்சி, மதுரை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு கூடுதலான பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்கூட்டியே தங்களது பயணத்தை முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.