ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி

4440பார்த்தது
ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி
மும்பை: டி.20 உலக கோப்பை சூப்பர் 8 சுற்றில் இன்று (பிப்.23) வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் வெஸ்ட் இண்டீஸ் - ஜிம்பாப்வே அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர்களில் 254/5 ரன்கள் குவித்தது. தொடர்ந்து, 255 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 107 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிப் பெற்றது.