கோடைகாலத்தில் நிலவும் அதிக வெப்பத்தின் காரணமாக பிரேக் பேடுகள் மற்றும் டிஸ்க்குகள் சூடாகி, பிரேக் ஆயிலின் செயல்திறன் குறைவதால் வாகனங்களின் பிரேக்குகள் செயலிழக்க அதிக வாய்ப்புள்ளது. இதனுடன் வாகனத்தில் அளவுக்கு அதிகமான சுமை ஏற்றுவதும், நீண்ட நாட்களாக மாற்றப்படாத பழைய பிரேக் ஆயிலைப் பயன்படுத்துவதும் இந்த பாதிப்பை மேலும் தீவிரமாக்குகிறது. எனவே, பிரேக் பிடிக்கும்போது ஏதேனும் சத்தம் அல்லது அதிர்வு ஏற்பட்டால், வாகன ஓட்டிகள் உடனடியாக அதைச் சரிசெய்வது அவசியமாகும்.