பெங்களூருவில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை செல்வப்பெருந்தகை சந்தித்து 2026 சட்டமன்றத் தேர்தல் மற்றும் திமுக கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "கூட்டணியில் இருக்கும் சர்ச்சை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. ராகுல் காந்தி மற்றும் மு.க.ஸ்டாலின் இடையே விரைவில் தொலைபேசி உரையாடல் நடைபெறும்" என தெரிவித்துள்ளார்.