மகன் மறைந்த துக்கத்தில் இருந்த இயக்குநர் பாரதிராஜா, சில மாதங்கள் மலேசியாவில் உள்ள மகள் வீட்டில் ஓய்வெடுத்து சென்னை திரும்பினார். 80 வயதை கடந்த அவர், கடந்த மாதம் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், தற்போது திடீர் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ICUவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.