அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா 'குதிரை பேரம்' என்ற விமர்சனத்திற்கு பதிலளித்துள்ளார். "இரவெல்லாம் யோசித்துப்பார்த்தேன்; குதிரை என்றால் என்ன, பேரம் என்றால் என்ன, குதிரை பேரம் என்றால் என்ன என்றே எனக்குத் தெரியாது. குதிரையே தெரியாத என்னிடம் இதைக் கேட்டால் என்ன சொல்வது? ஏற்கனவே குதிரை பேரம் நடத்தியவர்களுக்கு வேண்டுமானால் அதைப் பற்றித் தெரியலாம்" என அவர் கூறியுள்ளார்.