போர் காரணமாக 2.60 லட்சம் உக்ரைனியர்கள் அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள நிலையில், அதிபர் பைடன் அரசு வழங்கிய சிறப்புச் சலுகைகளை டிரம்ப் அரசு தாமதப்படுத்துகிறது. டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற விதிகளால், 2026 மார்ச் 31-க்கு பிறகு அவர்களால் அங்கு வாழ முடியாத சூழல் உருவாகியுள்ளது. போர் நிறுத்தம் இழுபறியாகி வருவதால், தங்கள் எதிர்காலம் குறித்து என்ன செய்வது என்று தெரியாமல் அம்மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.