நம்மை சுற்றியுள்ள தாவரங்கள் மரங்களின் இலைகள் ஏன் பச்சை நிறத்தில் இருக்கிறது என யோசித்ததுண்டா? குளோரோஃபில் என்பது மரம் மற்றும் செடிகளுக்கு தேவையான உணவை சூரிய ஒளியிலிருந்து பெற்று தருகிறது. அந்த நேரத்தில் சூரிய ஒளியில் இருந்து வரக்கூடிய சிவப்பு மற்றும் நீல நிற ஒளியை மட்டும் செடிகள் உட்கொள்கிறது. அதேபோல பச்சை நிறத்தை செடிகள் உட்கொள்ளாமல் பிரதிபலிக்கின்றது. இதன் காரணமாக தான் இலைகள் பச்சை நிறத்தில் இருக்கின்றன.