"என்ன தான் ஆச்சு இந்த பொம்மை முதல்வருக்கு?".. இபிஎஸ் தாக்கு

19பார்த்தது
"என்ன தான் ஆச்சு இந்த பொம்மை முதல்வருக்கு?".. இபிஎஸ் தாக்கு
விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீடு குறித்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “விளையாட்டு வீரர்களுக்கான அரசுப்பணிகளில் இட ஒதுக்கீடு என்பது, 2018-ல் எனது தலைமையிலான அதிமுக அரசு 2%-ஆக அறிவித்தது. ஆனால், இப்படி வெட்கமின்றி எங்கள் திட்டத்தின் மீது சவாரி செய்யும் எண்ணத்தை எல்லாம் கைவிட்டு, உங்கள் ஆட்சியின் சாதனைகளைக் கூறிப் பிரச்சாரம் செய்யப் பாருங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி