சட்டப்பேரவையில் ஆம்பூர் தொகுதி எம்.எல்.ஏ எழுப்பிய கேள்விக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் விரிவான பதிலை வாசித்தார். அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து, "பதிலைச் சுருக்கமாகச் சொல்லுங்கள்" என முழக்கமிட்டனர். இதனால் அதிருப்தியடைந்த அமைச்சர், "என்ன சார், எதை பேசினாலும் பேச விட மாட்டேங்கிறீங்க.. என்னதான் பிரச்சனை? நான் எதையுமே பேசக் கூடாதா?" என அவையில் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.