உங்களின் ATM அட்டை தொலைந்துவிட்டால், உங்கள் பணம் திருடுபோவதை தடுக்க உடனடியாக சில முக்கிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முதலில், உடனடியாக உங்கள் வங்கியை தொடர்புகொண்டு அல்லது வங்கியின் இணையதளத்திற்கு சென்று அட்டையை முடக்க (Block) வேண்டும். அடுத்து, புதிய கார்டுக்கு வங்கியில் விண்ணப்பிக்கும் வரை, அட்டை மூலம் தானாக செலுத்தப்படும் (Automatic Payments) சேவையை நிறுத்தி வைக்கவும். மேலும், உங்களுக்கு தெரியாமல் பணம் திருடப்படுகிறதா என்பதை அறிய உங்கள் பரிவர்த்தனை விவரங்களை (Transaction History) அடிக்கடி கண்காணிக்க வேண்டும்.