மத்திய அரசின் ஒதுக்கீட்டின்படி ரேசன் கடைகளுக்கு கோதுமை தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் சக்கரபாணி பதிலளித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “நாளிதழில் வெளியான செய்தியை வைத்து கோதுமை வழங்கவில்லை என இபிஎஸ் கூறியிருக்கிறார். மத்திய அரசு ஒதுக்கிய கோதுமைகள் முறையாக வழங்கப்பட்டு வருகிறது” என்றார். முன்னதாக, “மத்திய அரசு 8,722 டன் கோதுமையை ஒதுக்கீடு செய்தும், தமிழ்நாட்டில் உள்ள 12,753 ரேஷன் கடைகளில் கோதுமை விநியோகிக்கப்படவில்லை என இபிஎஸ் குற்றம்சாட்டினார்.