தமிழகத்தில் அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களையும் நிபந்தனையின்றி முழுமையாக எப்போது டம்மி முதல்வர் அறிவிக்கப்போகிறார் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி
ஸ்டாலின் தனது X தள பதிவில் கேள்வியெழுப்பியுள்ளார். இடைத்தேர்தல் முடிந்து ஒரு மாதமாகியும் பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து அரசு அமைதி காப்பதாக சாடியுள்ள அவர், தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின்படி முழு பயிர்க்கடனையும் ரத்து செய்து பொங்கல் பண்டிகையை விவசாயிகள் நிம்மதியாக கொண்டாட வழிவகுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.