அரசியல் என வந்துவிட்டால் குடும்ப உறுப்பினர்களை இழுத்துப்பேசி முட்டுச்சந்தில் நிற்கவைக்கும் நிலை தான் உள்ளது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். விஜய் - நடிகை த்ரிஷா குறித்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசிய கருத்துக்கு பதிலளித்த அவர், விஜய் இத்தகைய சூழ்நிலைகளை சமாளித்து மேலும் பக்குவமாக செயல்பட வேண்டும் என்றார். மேலும், அரசியலில் விமர்சனங்களை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் அவசியம் என்றும் கூறினார்.