நெல்சன் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார்
ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'ஜெயிலர் 2' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து, படத்தின் இறுதிக்கட்ட பின்னணி வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இத்திரைப்படத்தை வரும் செப்டம்பர் 3-ம் தேதி வெளியிடுவதா அல்லது 2026 தீபாவளி பண்டிகையன்று திரைக்கு கொண்டு வருவதா என்பது குறித்து படக்குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.