விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் தணிக்கை மறு ஆய்வு குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகளையடுத்து, தணிக்கை வாரியத்தின் முடிவை ஏற்று படக்குழு படத்தை மறு ஆய்விற்கு அனுப்பி வைத்துள்ளது. 20 நாட்களில் படத்தை தணிக்கை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், தணிக்கை முடிந்து மார்ச் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.