புதிய பயனாளிகளுக்கு எப்போது முதல் ரூ.1,000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்பது குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புதிய அப்டேட் கொடுத்துள்ளார். “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் 1 கோடியே 20 இலட்சம் பேருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு உள்ளது. இன்னும் இரண்டு மாதங்களில் அனைத்து மகளிர் தொகை திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்க முதல்வர் நடவடிக்கை எடுப்பார்” என்றார்.