தமிழ்நாடில் சட்டப்பேரவை தேர்தல் வரும் நிலையில், திமுக, அதிமுக, தவெக ஆகிய கட்சிகள் இலவச வாக்குறுதிகளை வாரி வழங்கி வருகின்றனர். அந்த வகையில், திமுக அறிவித்த மகளிர் உரிமைத் தொகையான ரூ.2000, எப்போதில் இருந்து வழங்கப்படும்? என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தல் வருகிற ஏப்.23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மே 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். இதில், திமுக வெற்றிப் பெற்றால், மே மாதம் முதலே மகளிர் உரிமை தொகை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.