திமுக அரசின் கொள்கை குறித்து தவெக தலைவர்
விஜய் விமர்சித்து இன்று (நவ.12) எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், "ஆட்சியில் இல்லாதபோது ‘தமிழ் தமிழ்’ என்றும், ‘தமிழர் தமிழர்’ என்றும்
திமுக அரசு கூறி வந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்ததும் அதிகாரப் பதவிகளுக்குள் அடக்கமாக அமர்ந்துகொண்டு,
அரசியல் சாசனக் கட்டுப்பாடுகள் மீது பழி போட்டுப்
பதவி சுகம் காணுகிறது. இப்போது எங்கே போனது மண், மானம் மற்றும் மொழி மீதான கொள்கைப் பாசம்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.