சட்டப்பேரவையில் பேசிய பாமக உறுப்பினர் கணேஷ்குமார், பள்ளி, கோவில்கள் அருகே இயங்கும் மதுக்கடைகள் மற்றும் ஆன்லைன் மது விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு, ஆன்லைனில் முன்பதிவு மட்டுமே செய்ய முடியும் என அமைச்சர் விக்னேஷ் விளக்கமளித்தார். தொடர்ந்து, 6 சிலிண்டர்கள், மாதந்தோறும் ₹2,500 மற்றும் புதிய பேருந்துகள் வாங்குவது குறித்த
அறிவிப்புகள் என்னாயிற்று என்றும் கணேஷ்குமார் கேள்வி எழுப்பினார்.