மனித உடலில் ஓய்வில்லாமல் உழைக்கும் மிக முக்கியமான உறுப்பு எதுவென்றால், அது நம் இதயம் தான். ஒரு சராசரி மனிதனின் இதயம் ஒரு நிமிடத்திற்கு சுமார் 70 முதல் 100 முறை துடித்து, நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சம் முறைக்கும் மேலாக சுருங்கி விரிந்து உடல் முழுவதும் ரத்தத்தை செலுத்துகிறது. நாம் உறங்கும் போது கூட மூளை மற்றும் இதயம் போன்ற உறுப்புகள் தொடர்ந்து இயங்கி கொண்டே இருப்பதுதான் நம் உயிர் இயக்கத்தின் ரகசியம்.