1947-இல்
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழகத்தில் (அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில்) முதன்முதலில் ஆட்சிக்கு வந்த கட்சி இந்திய தேசிய
காங்கிரஸ் ஆகும். சுதந்திரத்தின் போது ஓ.பி.ராமசாமி ரெட்டியார் முதலமைச்சராக இருந்த நிலையில், அதன் பின்னர் 1952-இல் நடைபெற்ற நாட்டின் முதல் பொதுத்தேர்தலிலும்
காங்கிரஸ் கட்சியே பெரும்பான்மை பெற்று சி.ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) தலைமையில் ஆட்சியை தக்கவைத்து கொண்டது.