சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்குள் ரசிகர்கள் விசில் கொண்டு வருவதற்கு முதல்முறையாக காவல்துறையினர் தடை விதித்துள்ளது. ஏற்கெனவே வாட்டர் பாட்டில், பவர் பேங்க் உள்ளிட்ட சில பொருட்களுக்கு தடை அமலில் உள்ள நிலையில், தற்போது விசில் கொண்டு செல்தற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த தடை குறித்து ICC அல்லது BCCI தரப்பில் எந்தவிதமான அதிகாரப்பூர்வ விதிமுறையும் இல்லை என்றாலும் உள்ளூர் கிரிக்கெட் வாரியம், காவல்துறை மற்றும் மைதான நிர்வாகத்தின் முடிவாகும்.