விடிய விடிய வெளுத்த மழை.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை

4599பார்த்தது
சென்னை மற்றும் புறநகர்களில் நேற்று (அக்.13) நள்ளிரவு இடி, மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. அக்டோபர் 16ஆம் தேதி அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், இன்று (அக்.14) முதல் சென்னையில் மழையின் அளவு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழையை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி