இந்தியாவில் வசிக்கும் அனைவரும் ஆதார் அட்டை பெற தகுதியுடையவர்கள் அல்ல என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தெளிவுபடுத்தியுள்ளது. சுற்றுலா பயணிகள், வெளிநாட்டினர் மற்றும் சட்டவிரோதமாக ஊடுருவியவர்கள் ஆதாருக்கு விண்ணப்பிக்க சட்டப்படி அனுமதி இல்லை. மேலும், இறந்தவர்களின் பெயரில் புதிய ஆதார் அட்டை பெறுவதும் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.