கரூர் விவகாரத்திற்கு காரணம் யார்?.. ஆதாரங்களை வெளியிட்ட தமிழக அரசு

77பார்த்தது
கரூர் விவகாரத்திற்கு காரணம் யார்?.. ஆதாரங்களை வெளியிட்ட தமிழக அரசு
கரூரில் தவெக கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில், அதற்கு தமிழக அரசு மீது தவெகவினர் குற்றம்சாட்டினர். இந்நிலையில், அரசின் செய்தித் தொடர்பாளர் அமுதா ஐஏஎஸ், இன்று (செப்.30) இது தொடர்பாக வீடியோ மூலம் விளக்கத்தை அளித்தார். அந்த வீடியோவில், தவெக தொண்டர்களிடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதும், கூட்ட நெரிசலில் பலர் ஆங்காங்கே மயங்கி விழுந்த காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம், திமுக அரசு மீது முன்வைத்த குற்றச்சாட்டுகளை தமிழக அரசு ஆதாரங்களுடன் மறுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி